வால்பாறையில் ஊருக்குள் உலா வந்த காட்டு யானைகள் விடிய விடிய விரட்டியடிப்பு

வால்பாறை : வால்பாறை  பகுதியில், வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானைகள் எஸ்டேட்  பகுதிகளில் தொடர்ந்து உலா வருகிறது. மீண்டும் வனத்திற்குள் திரும்பும்  காலம் தொடங்கி உள்ளது. இந்நிலையில், வலசை பாதைகளில் மீண்டும் வலம் வருகிறது.  நேற்று அதிகாலை தோனி முடி எஸ்டேட்டில் புகுந்த காட்டு யானைகளை  பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் வாகனத்தில் சைரன் ஒலிக்க செய்து  விரட்டி வனத்திற்குள் விட்டனர். இருப்பினும் தொடர்ந்து தொழிலாளர்கள்  குடியிருப்பு பகுதிக்கு வர முயற்சித்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விடிய விடிய யானைகளை கண்காணித்து, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடாமல் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: