தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் இ-சேவை மையங்கள் தொடங்குவதற்கான ஆணைகளை வழங்கினார் அமைச்சர் மனோதங்கராஜ்

சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலம் இ-சேவை மையங்கள் தொடங்குவதற்கான ஆணைகளை 36 நபர்களுக்கு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் இன்று வழங்கினார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் 2457 இ-சேவை மையங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது வழங்கப்படும் புதிய இ-சேவை மையங்கள் அரசின் சேவைகளைப் பொதுமக்கள் எளிதில் பெறுவதற்கும் இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும் பெறும் பயனளிக்கும். இந்நிகழ்வில், தகவல் தொழில் நுட்பவியல் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் நீரஜ் மித்தல், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் ஜெயசீலன் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: