பெரணமல்லூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்-சுகாதாரத்துறையினர் நடவடிக்கை

பெரணமல்லூர் : பெரணமல்லூர் பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதது மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற கடைகளுக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்தனர்.பெரணமல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ேநற்று, கொரோனா விழிப்புணர்வு மற்றும் பள்ளிகளின் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்கக்கூடாது, ஓட்டல்களில் சுகாதாரத்துடன் உணவு வழங்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது, ஓட்டல்கள் மற்றும் கடைகளில் முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருப்பது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது, உணவு பரிமாறுவது போன்றவற்றை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து, 4 கடைகள் மற்றும் 4 ஓட்டல்களுக்கு தலா ₹100 அபராதம் விதித்தனர்.

இதுபோல், தொடர்ந்து விதிமுறைகளை மீறி நடந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர். தொடர்ந்து, பள்ளிகளின் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை விற்கக்கூடாது என விழிப்புணர்வு துண்டு பிரசுரம் ஒட்டினர்.அப்போது, செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் வெங்கடாஜலபதி,  நல கல்வியாளர் எல்லப்பன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அன்பரசன், சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ேடார் கலந்து கொண்டனர்.

Related Stories: