கேப்டன் பதவி நீக்கம் தொடர்பாக முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்த விராட் கோலிக்கு நோட்டிஸ்: பிசிசிஐ தலைவர் கங்குலி மறுப்பு

மும்பை: கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்த விராட் கோலிக்கு நோட்டிஸ் அனுப்ப திட்டமிட்ட தகவலை பிசிசிஐ தலைவர் கங்குலி மறுத்துள்ளார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி தலைவர் பதவியிலிருந்து விலகிய விராட் கோலி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு புறப்படும் முன்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் கிரிக்கெட் உலகில் பெரும் அலையை உருவாக்கியது.

இது இந்திய கிரிக்கெட்டில் பெரும் அலையை கிளப்பிய நிலையில் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் முடிந்து இந்திய அணி நாடு திரும்பியதும் இது தொடர்பாக விளக்கம் கேட்டு விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நோட்டிஸ் அனுப்பும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை பிசிசிஐ தலைவர் கங்குலி திட்டவட்டமாக மறுத்துள்ளார். விராட் கோலிக்கு நோட்டிஸ் அனுப்பப்படும் என்ற தகவல் தவறானது என அவர் விள்ளக்கமளித்துள்ளார்.

Related Stories: