மாவட்டத்துக்கு ஒரு விமான நிலையம்: ஆந்திர முதல்வர் ஜெகன் அதிரடி

திருமலை: ஆந்திராவில் மொத்தம் 13 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் விசாகப்பட்டினம், விஜயவாடா, திருப்பதி, கர்னூல், ராஜமகேந்திரவரம் மற்றும் கடப்பா ஆகிய 6 மாவட்டங்களில் விமான நிலையங்கள் உள்ளன. மற்ற மாவட்டங்களிலும் தலா ஒரு விமான நிலையத்தை அமைப்பது தொடர்பாக திட்டமிடும்படி, அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன் மோகன்  உத்தரவிட்டுள்ளார். இந்த விமான நிலையங்கள் அனைத்தும் ஒரே அளவிலும், போயிங் போன்ற பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையிலும் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். விமான நிலையங்களையும் துறைமுகங்களையும் இணைக்கும் வகையில் சாலைகள் அமைக்கவும் ஜெகன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: