பனிச்சறுக்கில் விளையாடியபோது விபத்து பிரெஞ்சு நடிகர் பரிதாப பலி

பாரீஸ்: பனிச்சறுக்கில் விளையாடியபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி பிரெஞ்சு நடிகர் காஸ்பார்ட் உல்லியேல் உயிரிழந்தார். அவருக்கு வயது 37. இட் இஸ் ஒன்லி த எண்ட் ஆப் தி வேர்ல்ட் படத்தில் நடித்தவர் காஸ்பார்ட் உல்லியேல். இவர் பல பிரெஞ்சு படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இரு தினங்களுக்கு முன் மாண்ட்வலேசான் பகுதியில்  மலையில் பனிச்சறுக்கில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த வீரருடன் மோதியதில் பலத்த காயம் அடைந்த காஸ்பார்ட் கீழே சுருண்டு விழுந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். இளம் வயதில் காஸ்பார்ட் பலியானது, அவரது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: