×

சையது மோடி சர்வதேச பேட்மின்டன்...அரை இறுதியில் சிந்து

லக்னோ: சையது மோடி சர்வதேச பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார். காலிறுதியில் தாய்லாந்தின் சுபனிதா கேட்திங்குடன் நேற்று மோதிய சிந்து 11-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு அடுத்த 2 செட்களிலும் சிறப்பாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 11-21, 21-12, 21-17 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 5 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

அரையிறுதியில் ரஷ்யாவின் எவ்ஜெனியா கொசெட்ஸ்கயாவுடன் சிந்து மோதுகிறார். பிரனாய் வெளியேற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பிரான்ஸ் வீரர் அர்னாட் மெர்க்லேவுடன் மோதிய எச்.எஸ்.பிரனாய் (இந்தியா) 19-21, 16-21 என்ற நேர் செட்களில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். இப்போட்டி 59 நிமிடத்துக்கு நீடித்தது.

மஞ்சுநாத் அசத்தல்: மற்றொரு இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத் தனது காலிறுதியில் 11-21, 21-12, 21-18 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். அரையிறுதியில் மஞ்சுநாத் - மெர்க்லே மோதுகின்றனர்.  கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் விளையாட இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜுன் - ட்ரீசா ஜாலி ஜோடி தகுதி பெற்றுள்ளது.

Tags : Syed Modi ,International Badminton ,Sindhu , Syed Modi International Badminton ... Half In the end Sindhu
× RELATED இதில் அவளுடைய தப்பு எதுவும் கிடையாது!