தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா

பார்ல்: போலண்ட் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன் குவித்தது. கேப்டன் கே.எல்.ராகுல் 55 ரன் (79 பந்து, 4 பவுண்டரி), தவான் 29 ரன், கோஹ்லி 0, ரிஷப் பன்ட் 85 ரன் (71 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), ஷ்ரேயாஸ் 11, வெங்கடேஷ் 22 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

ஷர்துல் 40 ரன் (38 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), அஷ்வின் 25 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 48.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 288 ரன் எடுத்து வென்றது. டி காக் 78 ரன், ஜானிமன் மலான் 91 ரன், கேப்டன் தெம்பா பவுமா 35 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். மார்க்ரம் 37 ரன், வாண்டெர் டஸன் 37 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா 2-0 என தொடரை கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி போட்டி கேப் டவுனில் நாளை நடக்கிறது.

Related Stories: