ரேசில் முந்திய மாணிக்கம் தாகூர் அணி; தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவராக சின்னதம்பி நியமனம்

சென்னை: தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவராக அஸ்வத்தாமன் பதவி வகித்து வந்தார். இவர் தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் மாநில பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். இதனால், தமிழக மாணவர் காங்கிரசுக்கு புதிய மாநில தலைவரை நியமிக்க தேசிய மாணவர் காங்கிரஸ் தலைவர் நீரஜ் குந்தன் கட்சி தலைமைக்கு பரிந்துரை செய்தார்.  வழக்கம்போல மாணவர் காங்கிரஸ் தேர்விலும் மூத்த தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களை பரிந்துரை செய்தனர்.

அதன்படி, பலர் இந்த பதவிக்கு போட்டி போட்டாலும், மூத்த தலைவர்களான மாணிக்கம் தாகூர் தரப்பில் சின்னதம்பி என்பவரும், தங்கபாலு தரப்பில் ராஜீவ் காந்தி என்பவரும், செல்லக்குமார் தரப்பில் மாரிக்குமார் ஆகிய மூவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதையடுத்து, 3 பேரை கட்சி தலைமை டெல்லிக்கு வரவழைத்து நேர்முகத் தேர்வை நடத்தியது.  இறுதியாக தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவராக சின்னதம்பி என்பவரை தேர்வு செய்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று அறிவிப்பை வெளியிட்டார். புதிய தலைவர் சின்னதம்பி, மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: