செங்கல்பட்டில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும்

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 26ம் தேதி வைகை எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:  தாம்பரம் பகுதியில் வரும் 26ம் தேதி பராமரிப்பு பணிகள் நடப்பதால் காரைக்குடி- சென்னை எழும்பூர் (12606) இடையே காரைக்குடியில் இருந்து காலை 5.05 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்  செங்கல்பட்டு- சென்னை எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல்சென்னை எழும்பூர்-மதுரை (12635) இடையே 1.40 மணிக்கு புறப்படும் ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டு செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும். மேலும் புதுச்சேரி- டெல்லி இடையே (22403) இயக்கப்படும் விரைவு ரயில் புதுச்சேரியில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு, எழும்பூர் ரயில் நிலையம் செல்லாமல் செங்கல்பட்டு, அரக்கோணம், பெரம்பூர், கொருக்குப்பேட்டை வழியாக டெல்லி செல்லும்.

Related Stories: