கோவையை சேர்ந்த முகமது ரபிக்கு கோட்டை அமீர் விருது அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட கோட்டை அமீரின் பெயரால் ‘கோட்டை அமீர் மதநல்லிணக்கப் பதக்கம்’ என்ற பதக்கம் ஒன்று அரசால் ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு சிறப்பாக சேவை செய்துவரும் ஒரு நபருக்கு ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் இப்பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பதக்கம் வெள்ளியால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டு இருக்கும். இதுதவிர ரூ.25 ஆயிரத்திற்கான வரைவு கேட்புக் காசோலையும், சான்றிதழும் முதலமைச்சரால் வழங்கப்படும்.

2022ம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவிருக்கும் கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்தினை மத நல்லிணக்கத்திற்காக பணியாற்றிய கோயம்புத்தூரை சேர்ந்த ஜே.முகமது ரபிக்குக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 26.1.2022 அன்று சென்னையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் அவருக்கு ‘கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்’ வழங்க இதன் மூலம் அரசால் ஆணையிடப்படுகிறது.

Related Stories: