×

அமர் ஜவான் ஜோதி இடமாற்றம்: ராகுல்காந்தி கடும் கண்டனம்

புதுடெல்லி: கடந்த 1971ம் ஆண்டு நடந்த போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக 1972ம் ஆண்டு குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் உள்ள ‘இந்தியா கேட்’ பகுதியில் அமர்ஜவான் ஜோதி எனப்படும் அணையா விளக்கு ஏற்றப்பட்டது. இந்தியா கேட் என்பது பிரிட்டிஷ் அரசு மூலம் கட்டப்பட்டது. பிரிட்டிஷ்  இந்திய ராணுவ வீரர்கள் 1914-1921 இடையிலான முதல் உலகப்போரில் வீர மரணம்  அடைந்ததன் நினைவாக இது கட்டப்பட்டது. இங்குதான் இந்திய அரசு மூலம் அமர்  ஜவான் ஜோதி என்ற நினைவு ஜோதி கட்டப்பட்டது. வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக கடந்த 50 வருடமாக இந்த தீ பந்தம் விடாமல் எரிந்து கொண்டு இருக்கிறது.

இந்த அமர் ஜவான் ஜோதி மற்றும் நினைவிடத்தில் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தின் போது இந்திய பிரதமர் மரியாதை செலுத்துவது வழக்கம். இதற்கிடையே கடந்த 2019ம் ஆண்டு ெடல்லியில் தேசிய போர் நினைவகம் திறக்கப்பட்டது. இந்நிலையில் அமர்ஜவான் ஜோதியை  தேசிய போர் நினைவகத்திற்கு இன்று இடமாற்றம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘போர் வீரர்களுக்காக ஏற்றப்பட்ட அமர்ஜவான் ஜோதி இன்று அணைக்கப்படுவது வருத்தம் அளிக்கின்றது. சிலரால் தேசப்பற்றையும் தியாகத்தையும் புரிந்து கொள்ள முடியாது. நமது வீரர்களுக்காக மீண்டும் அமர்ஜவான் ஜோதியை ஏற்றுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.



Tags : Amar Jawan ,Rahul Gandhi , Amar Jawan torch relocation: Rahul Gandhi strongly condemns
× RELATED சொல்லிட்டாங்க…