சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்: உள்துறை செயலாளர் அறிக்கை தர மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் சி.சி.டி.வி. பதிவுகளை பாதுகாக்கவும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. சட்டக்கல்லூரி ,மாணவர் அப்துல் ரஹீம் தாக்கப்பட்டதாக வந்த செய்தியின் அடிப்படையில் ஆணைய தலைவர் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளார்.   

Related Stories: