பராமரிப்பு பணிகள் காரணமாக திருப்பதி-காட்பாடி ரயில்கள் 24ம் தேதி ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:  திருப்பதி- காட்பாடி (ரயில் எண் 07661) இடையே இரவு 7.25 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில், அதைப்போன்று மறுமார்க்கமாக காட்பாடி- திருப்பதி (ரயில் எண் 07662) இடையே காட்பாடியில் இருந்து காலை 6.15 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்,

பித்ரகுண்டா- சென்னை சென்ட்ரல் ( ரயில் எண் 17237) இடையே பித்ரகுண்டாவில் இருந்து காலை 4.45 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில், சென்னை சென்ட்ரல்- பித்ரகுண்டா இடையே ( ரயில் எண் 17238) மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் வரும் 24ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: