இந்தியா-ஈரான் போட்டி `டிரா’

மும்பை: 20வது ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டி மும்பையில் நேற்று தொடங்கியது. இதில் 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடக்கிறது. நேற்று ஏ பிரிவில் முதல் போட்டியில் சீனா- சீன தைபே மோதின. இதில் 4-0 என்ற கோல் கணக்கில் சீனா வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியா-ஈரான் மோதின. இந்த ஆட்டத்தில் கடைசி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் 0-0 என ஆட்டம் சமனில் முடிந்தது. இந்தியா அடுத்த ஆட்டத்தில் சீன தைபேயை வரும் 23ம் தேதி சந்திக்கிறது. இன்று ஜப்பான்-மியான்மர், ஆஸ்திரேலியா-இந்தோனேசியா, தாய்லாந்து-பிலிப்பைன்ஸ், வியட்நாம்-தென்கொரியா மோதுகின்றன.

Related Stories: