கேரள மாஜி முதல்வருக்கு கொரோனா

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தனுக்கு (98) கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை அவரது மகன் அருண்குமார் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அருண்குமார் தனது முகநூலில் கூறியிருப்பதாவது: என்னுடைய தந்தை வி.எஸ். அச்சுதானந்தனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக என்னுடைய தந்தை வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். கொரோனா பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக பார்வையாளர்கள் யாரும் அவரை பார்க்க அனுமதிக்காமல் மிகவும் கவனமாக இருந்தோம்.

ஆனாலும் தற்போது அவருக்கு தொற்று பரவி உள்ளது. அவரை கவனித்து வந்த நர்சுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் என்னுடைய தந்தையை பரிசோதித்த போது அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். தற்போது அவரது உடல் நிலை சீராக இருக்கிறது. இவ்வாறு அருண்குமார் முகநூலில் குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories: