பிறந்தநாளில் அக்‌சர் பட்டேல் காதலியுடன் நிச்சயதார்த்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல். ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக ஆடும் இவரை அடுத்த சீசனுக்கு அந்த அணி தக்க வைத்துள்ளது. அக்சர், மேஹா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். நேற்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் காதலிக்கு மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இந்த படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், ``இன்று நமது வாழ்க்கையின் புதிய ஆரம்பம். ஒன்றாக எப்போதும்... நித்தியம் வரை உன்னை நேசிக்கிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.

Related Stories: