உ.பி. தேர்தல்.. இளைஞர்களுக்கென பிரத்யேக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்!!

லக்னோ : உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் கர்ஹால் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிட உள்ளதாக சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனிடையே இளைஞர்களுக்கான நலனை முன்வைக்கும் தேர்தல் அறிக்கை ஒன்றை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. உத்தரப் மாநிலம் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 8ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக கட்சியின் முதல்வர் வேட்பாளராக யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமாஜ்வாதி கட்சியின் முதல்வர் வேட்பாளரான அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத்- அகிலேஷ் யாதவ் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரம் வெளியாகி உள்ள நிலையில், ப்ரியங்கா காந்தி போட்டியிடப் போகிறாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயவாதி தேர்தலில் போட்டியிடப்வில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உத்தரப் பிரதேச தேர்தலையொட்டி இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ப்ரியங்கா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இதனை வெளியிட்டனர்.  

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ப்ரியங்கா காந்தி, உத்தரப் பிரதேச அரசின் மீது இளைஞர்கள் நம்பிக்கை இறந்துவிட்டதாகவும் உ.பி.யில் யோகி ஆதித்யநாத் அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க தவறவிட்டது என்றும் கூறினார். மேலும் இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வை என்பது உத்தரப் பிரதேசத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அளிப்பதற்கான திட்டங்கள் உ.பி.யில் இருந்து தொடங்கப்பட வேண்டும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  

Related Stories: