தமிழ்நாடு முழுவதும் உள்ள சுரங்க பணிகளை டிரோன் மூலம் கண்காணிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள சுரங்க பணிகளை டிரோன் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சுரங்கங்கள், கனிமங்கள், பூமியின் கீழ் உள்ள அனைத்தும் இந்திய மக்களுக்கு சொந்தமான தேசத்தின் செல்வங்கள் என்றும் பேராசை கொண்ட சிலர் அநியாய லாபம் ஈட்ட சுரங்கங்களை சுரண்டுவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தொழில் வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில் தேசத்தில் செல்வமும், பொதுநலனும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: