டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவப்படும்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

டெல்லி: டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். நேதாஜியின் 125வது பிறந்தநாளையொட்டி இந்தியா கேட்டில் அவருக்கு கிரானைட்டால் ஆன பெரிய சிலை நிறுவப்படும் என மோடி கூறினார். நேதாஜிக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இந்த சிலை அமையும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். இந்தியா கேட்டில் இருந்து அமர் ஜவான் ஜோதி இடமாற்றம் செய்யப்படும் நிலையில் பிரதமர் இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார்.

Related Stories: