×

குலசேகரம் அருகே பரபரப்பு அதிகபாரம் ஏற்றிவந்த லாரிகள் சிறைபிடிப்பு-2வது நாளாக பொதுமக்கள் போராட்டம்

குலசேகரம் : குலசேகரம் அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டன.குமரி மாவட்டம் குலசேகரத்தை  அடுத்த சித்திரங்கோட்டில் இருந்து வேர்க்கிளம்பி, சுவாமியார்மடம் செல்லும்  சாலையில் தினசரி ஏராளமான வாகனங்கள் கல், எம் சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கனிம  வளங்களை ஏற்றி செல்கின்றன. இவற்றில் பெரும்பான்மையான வாகனங்களில்  அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் பாரம் ஏற்றி செல்லப்படத்தாக பொதுமக்கள் புகார் கூறிவருகின்றனர்.

 இதனால் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து  நெருக்கடி, விபத்து போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக காலை,  மாலை வேளைகளில் இந்த வாகனங்களால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து  வருகின்றனர். ேமலும் இந்த வாகனங்களால் சாலைகள் அடிக்கடி பழுதடைந்தும்  வருகின்றன.எனவே அதிக பாரம்  ஏற்றிக்ெகாண்டு ேவகமாக ெசல்லும் கனரக வாகனங்களை தடை செய்ய வேண்டும் என  பொதுமக்கள் தரப்பில் நீண்டநாள் கோரிக்கை உள்ளது.

இந்த நிலையில்  இருதினங்களுக்கு முன் இரவு வேர்க்கிளம்பி அருகே செட்டிச்சார்விளை பகுதியில்  அதிக பாரம் ஏற்றிவந்த கனரக வாகனங்களை ெபாதுமக்கள் திடீரென தடுத்து நிறுத்தி  போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்து வந்த திருவட்டார்  போலீசார், அதிக பாரம் ஏற்றிவந்து பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டிருந்த 4  டாரஸ் லாரிகளுக்கு அபராதம் விதித்தனர். இதையடுத்து ெபாதுமக்கள் அங்கிருந்து  கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் 2வது நாளாக அதிக  பாரம் ஏற்றிய வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இதைக்கண்ட பொதுமக்கள்  வேர்க்கிளம்பியை அடுத்த கண்ணனூர் சந்திப்பில் வாகனங்களை மறித்து சிறைபிடித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து 2 லாரிகள்  மீது நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து  சென்றனர். பொதுமக்களின் போராட்டத்தால் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்பட்டது.

Tags : Kulasekara , Kulasekara: Heavy lorries near Kulasekara were seized by the public. Kumari District Kulasekara
× RELATED குலசேகரத்தில் ஒரே நாளில் 10 கடைகளை உடைத்து திருட்டு