லத்தேரி எருதுவிடும் விழாவில் மாடுமுட்டி சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!

வேலூர்: வேலூர் மாவட்டம் லத்தேரி எருதுவிடும் விழாவில் மாடுமுட்டி சிகிச்சை பெற்று வந்த சிறுமி வினோதினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். லத்தேரி அடுத்த கீழ்முட்டுக்கூர்  கிராமத்தில் எருதுவிடும் விழா நடைபெற்றது. இவ்விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் குவிந்தனர். இதனிடையே மாடு ஒன்று முட்டியதில் சிறுமி காயமடைந்தார். மேலும், இந்த விழாவின் போது பலருக்கும் காயம் ஏற்பட்டது.

Related Stories: