×

புதிய சிப்காட் தொழிற்பூங்கா, ஜல்லிக்கட்டு அரங்கம்.. மதுரை நகரம் மாமதுரையாக மாற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி!!

மதுரை : சென்னை தலைமை செயலகத்தில் இருந்து மதுரையில் ரூ.51.77 கோடி மதிப்பீட்டில் 10 முடிவுற்ற திட்டப்பணிகளை காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின்  வைத்தார்.ரூ.49.74 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள 11 புதிய திட்ட பணிகளுக்கான அடிக்கலையும் முதல்வர் ஸ்டாலின் நாட்டினார்.இதைத் தொடர்ந்து மதுரையில் ரூ.219 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் முதல்வர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அதில், மதுரையில் திமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களையும் செயல்படுத்த உள்ள திட்டங்களையும்  முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டார்.

நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின் பேசியதாவது, மதுரையை தரம் உயர்த்தி மாநகராட்சியாக மேம்படுத்தியது திமுக அரசு.மதுரையில் உயர்நீதிமன்ற கிளை அமைக்க நிலம் கையகப்படுத்தி அடிக்கல் நாட்டியது திமுக ஆட்சி.மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர் ஆகியோருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டது கலைஞர் ஆட்சியில் தான்.மதுரை மாட்டுத் தாவணியில் பேருந்து நிலையம் மற்றும் அங்காடிகள் அமைத்தது திமுக ஆட்சி தான்.சேது சமுத்திர திட்டத்தின் தொடக்க விழாவை நடத்தியது மதுரையில் தான். மதுரை விமான நிலையத்தின் புதிய முனையங்களுக்கு அடிக்கல் நாட்டி திறந்து வைக்கப்பட்டது திமுக ஆட்சியில் தான்.

மதுரையில் ரூ.114 கோடியில் கலைஞர் பெயரில் மாபெரும் நூலகம் அமைய உள்ளது. 8 தளத்துடன் கலைஞர் பெயரில் நூலகம் அமைய உள்ளது உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் பெருமை தான்.மதுரை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன்.மதுரையில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டுகளில் ரூ.500 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். மதுரை மத்திய சிறைச்சாலை புதிய இடத்திற்கு மாற்றப்படும்.மதுரையில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.அலங்காநல்லூரில் புதிதாக மாபெரும் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும்.போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும்.வைகை வடகரை சாலை ரூ.100 கோடி செலவில் நீட்டிக்கப்படும்.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.25 கோடியில் திருப்பணிகள் நடைபெறும் தீ விபத்தில் சேதம் அடைந்த வீர வசந்தராயர் மண்டபம் ரூ. 25 கோடியில் புனரமைக்கப்படும்.திருப்பணிகளும் புனரமைப்பு பணிகளும் முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளில் குடமுழுக்கு நடைபெறும்.மதுரை நகரம் மாமதுரையாக, அழகான மதுரையாக, எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்ற மதுரையாக மாற்றப்படும், என்றார்.


Tags : Chipkat Yozhunga ,Jallikkatu Stadium ,CM ,Stalin ,Madurai , மதுரை,சிப்காட், தொழிற்பூங்கா, ஜல்லிக்கட்டு ,அரங்கம்,மாமதுரை
× RELATED கடந்த 10 ஆண்டுகாலமாக மாநில உரிமைகளை...