×

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகனுக்கு சீட் வழங்க பாஜக மறுப்பு!!

பானாஜி : கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகனுக்கு சீட் வழங்கப்படாதது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 40 தொகுதிகளை கொண்ட கோவாவில் 34 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. கோவாவில் பாஜகவின் முகமாக அறியப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கர் விரும்பிய பானாஜி தொகுதி வழங்கப்படவில்லை. அங்கு தற்போது எம்எல்ஏ-வாக உள்ள அடானாசியோவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் உத்பால் பாரிக்கர் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. உத்பால் பாரிக்கர் தங்கள் கட்சிக்கு வர வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் உத்மால் பாரிகருடன் மூத்த தலைவர்கள் தொடர்பில் இருப்பதாகவும் இப்பிரச்சனை விரைவில் முடிவிற்கு வரும் என்றும் அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார். உத்பால் பாரிக்கருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்ததையும் பிரமோத் சாவந்த் கடுமையாக சாடி உள்ளார். தற்போது அமைச்சராக உள்ள இருவர் மற்றும் அவர்களின் மனைவிகளுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 4 பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன

Tags : BJP ,Goa ,Chief Minister ,Manohar Parrikar ,Assembly elections , பாஜக,கோவா ,சட்டப்பேரவை,தேர்தல்
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...