கானா நாட்டில் வெடிமருந்து நிரப்பப்பட்ட லாரி வெடித்து சிதறியதால் பயங்கரம் : 17 பேர் உடல் சிதறி உயிரிழப்பு; 59 பேர் படுகாயம்!!

கானா : மேற்கு ஆப்ரிக்க நாடான கானாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 59 பேர் காயம் அடைந்துள்ளனர்.கானா நாட்டின் மேற்குப்பகுதியில் உள்ள ஒரு தங்க சுரங்கத்திற்கு வெடி பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி, ஆபியேட் என்ற சந்தைப்பகுதியில் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது .இந்த விபத்தில் லாரியில் இருந்த வெடி பொருட்கள் வெடித்துச் சிதறியதில் அருகில் இருந்த பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடி விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த பயங்கர வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. வெடி விபத்தால் பலர் உயிரிழந்து இருப்பது துயரமான சம்பவம் என்று கானா நாட்டின் அதிபர் Nana Akufo-Addo வேதனை தெரிவித்துள்ளார். வெடி விபத்தால் ஆபியேட் நகரமே உருக்குலைந்து இருப்பது கானாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: