×

2022 T20 உலகக்கோப்பை தொடர் அட்டவணை வெளியீடு : அக்டோபர் 23ல் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதல்!!

சிட்னி: 2022 ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா கோப்பையை தட்டிச்சென்றது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை போட்டி அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்தியா உள்பட 12 அணிகள் நேரடியாக குரூப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

எஞ்சிய 4 அணிகள் தகுதிச்சுற்றுகளில் வெற்றிபெற்று குரூப் சுற்றுக்குள் நுழைய உள்ளன. குரூப் சுற்றுக்குள் நுழைவதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் அக்டோபர் 16-ம் தேதி தொடங்குகிறது.அதன் பின்னர், அக்டோபர் 22-ம் தேதி சனிக்கிழமை டி20 உலகக்கோப்பையின் லீக் சுற்றுப்போட்டிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. லீக் சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறது.

இந்தியா போட்டிகளின் விபரங்கள்:

23 அக்டோபர்: இந்தியா vs பாகிஸ்தான் (மெல்பேர்ன்)

27 அக்டோபர்: இந்தியா vs ஏ2(சிட்னி)

30 அக்டோபர்: இந்தியா vs தென்னாப்பிரிக்கா(பெர்த்)

2 நவம்பர்: இந்தியா vs பங்களாதேஷ்(பெர்த்)

6 நவம்பர்: இந்தியா vs பி 1 (மெல்பேர்ன்)

நவம்பர் 9ம் தேதி முதல் அரையிறுதி

நவம்பர் 10ம் தேதி இரண்டாவது அரையிறுதி

நவம்பர் 13ம் தேதி இறுதிப்போட்டி

Tags : T20 World Cup Series ,India ,Pakistan , உலகக்கோப்பை, கிரிக்கெட்,இந்திய அணி
× RELATED இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவு: பாகிஸ்தான் பரிசீலனை