×

அமெரிக்காவில் அடங்காத கொரோனா.. இந்தியா, இத்தாலியில் தொடர்ந்து உச்சம்.. கட்டுக்கடங்காத பாதிப்புகள்!!

வாஷிங்டன்,சீனாவின் வுகான் நகரில் 2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 கோடியே 27 லட்சத்து 81 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 9 லட்சத்து 39 ஆயிரத்து 174 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 27 கோடியே 62 லட்சத்து 49 ஆயிரத்து 993 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 55 லட்சத்து 92 ஆயிரத்து 477 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் திடீரென தினசரி கேஸ்கள் 3 லட்சத்தை தாண்டி உள்ளது. இதுவரை 38,563,632 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இத்தாலியில் 9,408,188 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவில் புதிதாக 641,038 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 70,465,555 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.



Tags : United States ,India, Italy , கொரோனா, வைரஸ்,வுகான்
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்