ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்

மஸ்கட்: இந்தியா உட்பட 8 முன்னணி அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி இன்று ஓமனில் தொடங்குகிறது. ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி  ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இன்று முதல் ஜன.28ம் தேதி வரை நடைபெறும். ஆசிய கண்டத்தின் முன்னணி அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி, தலா 4 அணிகள் கொண்ட ஏ,பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த 2 பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் தலா 2 அணிகள் அரையிறுதியில் விளையாடும். அரையிறுதி ஆட்டங்கள் ஜன.26ம் தேதியும், ஜன.28ம் தேதியும் நடைபெறும். இந்தப்போட்டியில் பங்கேற்க உள்ள கோல்கீப்பர் சவீதா தலைமையிலான இந்திய அணி பெங்களூரில் பயிற்சியை முடித்துக் கொண்டு  ஜன.16ம் தேதி விமானம் மூலம்  மஸ்கட் சென்றது. டோக்கியோ ஒலிம்பிக்கில் கலக்கிய பிறகு இந்திய மகளிர் அணி பங்கேற்கும் பெரிய போட்டி இதுதான்.

பங்கேற்கும் நாடுகள்

ஏ பிரிவு: இந்தியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர்  

பி பிரிவு: சீனா, கொரியா, தாய்லாந்து, இந்தோனேசியா

இந்தியாவின் ஆட்டங்கள்

நாள்    இந்திய நேரம்    எதிரணி

ஜன.21    இரவு 9.30    மலேசியா

ஜன.23    இரவு 8.30    ஜப்பான்

ஜன.24    இரவு 8.30    சிங்கப்பூர்

Related Stories: