கன்னட இயக்குனர் பிரதீப் ராஜ் மரணம்

சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக  கன்னட சினிமா இயக்குனர் பிரதீப் ராஜ் நேற்று உயிரிழந்தார். கன்னடத்தில் கிர்கிட்ல், கிச்சு, யஷ் நடித்த கிர்கட்டா படங்களை இயக்கியவர் பிரதீப் ராஜ். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட பிரதீப் ராஜ், மூச்சு விடுவதில் சிரமப்பட்டார். இதையடுத்து புதுச் சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அங்கு அவரது உடல் உறுப்புகள் செயலிழந்ததால் நேற்று அதிகாலை மரணமடைந்தார். அவரது மறைவுக்கு கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: