சாய் பல்லவிக்கு தங்கச்சி ரோல் சிரஞ்சீவிக்கு ‘நோ’ மகேஷ்பாபுவுக்கு ‘எஸ்’

ஐதராபாத்: சிரஞ்சீவி படத்தில் தங்கையாக நடிக்க மறுப்பு தெரிவித்த சாய் பல்லவி, மகேஷ் பாபு படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். தமிழில் அஜித் நடித்த படம் வேதாளம். இதில் அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். இதே படம் தெலுங்கில் போலா சங்கர் பெயரில் ரீமேக் ஆகிறது. சிரஞ்சீவி நடிக்கிறார். லட்சுமி மேனன் வேடத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. அவர் இதில் நடிக்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து இப்போது அந்த வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் திரி விக்ரம் இயக்கும் புதிய படத்தில் மகேஷ்பாபு நடிக்க உள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்திலும் தங்கை வேடம் முக்கியமான கதாபாத்திரமாக இருக்குமாம். இதனால் இதில் மகேஷ்பாபுவுக்கு தங்கையாக நடிக்க சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. அவர் சம்மதம் தெரிவிப்பார் என பட வட்டாரங்கள் கூறியுள்ளன.

Related Stories: