பொதட்டூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பேற்பு

திருத்தணி: பொதட்டூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலராக ஜெ.பிரகாஷ் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பொதட்டூர்பேட்டை பேரூராட்சி பொறுப்பு செயல் அலுவலராக பணியாற்றி வந்த மாலா, புதிதாக பொறுப்பேற்று கொண்ட ஜெ.பிரகாஷிடம் பேரூரட்சி அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்தார். பேரூராட்சி செயல் அலுவலராக பொறுப்பேற்று கொண்ட ஜெ‌.பிரகாஷ், மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றினார். தற்போது, அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு பொதட்டூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: