பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு உடல்நலக்குறைவு: ஸ்டான்லியில் அனுமதி

சென்னை: கேளம்பாக்கத்தில் ராமராஜ்யம் என்ற பெயரில் ஆசிரமமும், சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியும் நடத்தி வந்தவர் சிவசங்கர் பாபா. இவர் மீது அதே பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் தொடர்பாக கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனடிப்படையில் சிவசங்கர் பாபா கடந்த 2021 ஜூன் 16ம் தேதி கைது செய்யப்பட்டார்.

சிவசங்கர் பாபா மீது 5 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories: