முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.2.87 கோடி ரொக்கப்பணம் சிக்கியது

சென்னை: தமிழக அரசின் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தனது அரசியல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அரசு நிதிமுறைகேடு மூலமாக, தனது பெயரிலும், தனது குடும்பத்தினர், உறவினர் மற்றும் பினாமிகளின் பெயர்களிலும் பல்வேறு சொத்துக்களை தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களிலும் வாங்கியுள்ளதாகவும், இது சம்மந்தமாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்திற்கு, தான் அனுப்பிய மனுவின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள, இயக்குநர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அவர்களுக்கு உத்தரவு வழங்குமாறு கோரி எம்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரக உத்தரவுப்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் கே.பி.அன்பழகன் (வயது 62), தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது, 27.04.2016 முதல் 15.03.2021 வரையிலான காலத்தில் தன் பெயரிலும் தனது குடும்பத்தினர் மற்றும் பிற நபர்களின் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக Rs.11,32,95,755/- சொத்து சேர்த்ததாக கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, அவரது மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் வைஷ்ணவி க/பெ சந்திரமோகன் ஆகியோர்கள் மீது தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்புமற்றும் கண்காணிப்புபிரிவு குற்றஎண். 03/AC/2022, u/s 13(2) r/w 13(1) (e) of the Prevention of Corruption Act. 1988 and 13(2) r/w 13(1) (b) of the Prevention of Corruption Act, 1988 as amended in 2018 and 109 IPC r/w 13(2) r/w 13(1) (e) of the Prevention of Corruption Act, 1988 and 12 r/w 13(2) r/w 13(1) (b) of the Prevention of Corruption Act, 1988 as amended in 2018 என்ற பிரிவுகளின் கீழ் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 58 இடங்களில் (தருமபுரி மாவட்டம்-53, சேலம்- 1, சென்னை-3, தெலுங்கானா மாநிலம்-1) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் இன்று (20.01.2022) சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பணம் ரூ.2,87,98,650/-, தங்கநகைகள் 6.637 கிலோகிராம், சுமார் 13.85 கிலோகிராம் வெள்ளி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத பணம் ரூ.2,65,31,650/-, வங்கி பெட்டக சாவி மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

Related Stories: