மோடியின் பாஜக ஆட்சியில் சமூகநீதி புறக்கணிப்பு அப்பட்டமாக கொடிகட்டிப் பறக்கிறது: கி.வீரமணி சாடல்

சென்னை: பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத ஓ.பி.சி. இடஒதுக்கீடு ஆணையை பற்றி ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களுக்கு கவலையில்லை என்று கி.வீரமணி தெரிவித்திருக்கிறார். 15 தேசிய பல்கலைக்கழகங்களில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு பூஜ்ஜியம் என்ற விவரம் தற்போது கிடைத்துள்ளது. மோடியின் பாஜக ஆட்சியில் சமூகநீதி புறக்கணிப்பு அப்பட்டமாக கொடிகட்டிப் பறக்கிறது என்றும் கி.வீரமணி விமர்சித்திருக்கிறார். சமூகநீதி காவலர் என்றால் பிரதமர் மோடி ஏன் இந்த அநீதிக்கு பரிகாரம் தேட முன்வரவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: