×

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் 243 பேருக்கு தொற்று

திருமலை: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் பொங்கல் பண்டிகையொட்டி தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பினர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை 2நாட்கள் மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் 91 பேருக்கும், நேற்று 152 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.  இதனால் விடுமுறை முடிந்து வரக்கூடிய அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 சதவீத பணியாளர்களுடன் ஏற்கனவே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக இந்த மாத இறுதியில் விண்ணில் செலுத்தப்பட இருந்த ஜி.பி.எஸ். தொழில்நுட்ப செயற்கைக்கோள் மற்றும் ககன்யான் திட்டப்பணிகள் காலதாமதம் ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, கடந்த வாரம் இஸ்ரோ தலைவராக பதவியேற்ற சோமநாத்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Tags : Sriharikota Space Research Center , Sriharikota, space exploration, for 243 people, infection
× RELATED ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் 243 பேருக்கு தொற்று