கத்தியை காட்டி மிரட்டி பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி பெரம்பலூர் அதிமுக நிர்வாகி கைது

பெரம்பலூர்: கத்தியைக் காட்டி மிரட்டி பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்த அதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் வினோத்(48). அதிமுக பேரூர் செயலாளர். இவர் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த திருமணமான 40 வயது பெண்ணை, பலமுறை செல்போன் மூலம் தொடர்புகொண்டு, தனது ஆசைக்கு இணங்கும்படி பாலியல் தொந்தரவு ெகாடுத்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் மசியவில்லை. இதனால் அந்த ெபண்ணை அசிங்கமாக திட்டி, அடிக்கடி மிரட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் காஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அந்த பெண், நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வினோத், அந்த பெண்ணிண் கையை பிடித்து இழுத்து கத்தியை காட்டி மிரட்டி தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. பெண் சத்தம் போடவே அப்பகுதியினர் ஓடிவந்து பெண்ணை மீட்டனர். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிந்து, வினோத்தை நேற்று இரவு கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி, அத்துமீறி வழிமறித்து மிரட்டுதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: