பாலியல் வன்கொடுமையா?: புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் தற்காலிக பெண் ஊழியர் மர்மநபர்களால் அடித்துக் கொலை..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் தற்காலிக பெண் ஊழியர் கொலை செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் உள்ள ஓய்வறையில் மர்மநபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொல்லப்பட்ட தற்காலிக பெண் உதவியாளருக்கு வயது 65 என கூறப்படுகிறது. கொல்லப்பட்டவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை, திருமணம் ஆகவில்லை.  பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்திருக்கிறது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: