×

சுதந்திரத்தின் 75-வது ஆண்டு பெருவிழாவிலிருந்து 'தங்க இந்தியாவை நோக்கி'எனும் தேசிய விழாவை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்!!

டெல்லி : சுதந்திரத்தின் 75-வது ஆண்டு பெருவிழாவிலிருந்து தங்க இந்தியாவை நோக்கி எனும் தேசிய விழாவை காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். 30-க்கும் அதிகமான இயக்கங்கள், 15,000-க்கும் அதிகமான நிகழ்ச்சிகள் உட்பட சுதந்திரத்தின் 75-வது ஆண்டு பெருவிழாவுக்கு பிரம்ம குமாரிகளால் அர்ப்பணிக்கப்பட்ட ஓராண்டு கால முன்முயற்சிகள் இந்த நிகழ்வில் தொடங்கப்படுகிறது.

இந்த நிகழ்வின் போது பிரம்ம குமாரிகளின் 7 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். எனது இந்தியா ஆரோக்கிய இந்தியா, தற்சார்பு இந்தியா: தற்சார்பு விவசாயிகள், பெண்கள்: இந்தியாவின் கொடி ஏந்திச் செல்வோர், அமைதியின் சக்தி பேருந்து பிரச்சாரம், கண்டறியப்படாத இந்தியா சைக்கிள் பயணம், ஒன்றுபட்ட இந்தியா இரு சக்கர மோட்டார் வாகன பிரச்சாரம், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பசுமை முன்முயற்சிகள் ஆகியவை இதில் அடங்கும்.

எனது இந்தியா ஆரோக்கிய இந்தியா முன்முயற்சியில், ஆன்மீகம், நல்வாழ்வு, ஊட்டச்சத்து மீதான கவனத்துடன் மருத்துவக் கல்லூரிகளிலும், மருத்துவமனைகளிலும் பல வகையான நிகழ்வுகள் நடைபெறும். மருத்துவ முகாம்கள், புற்றுநோய் கண்டறிதல், மருத்துவர்கள் மற்றும் இதர சுகாதார ஊழியர்களுக்கான கருத்தரங்குகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். தற்சார்பு இந்தியா: தற்சார்பு விவசாயிகள் திட்டத்தின் கீழ் 75 விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் முகாம்கள், 75 விவசாயிகளுக்கான கருத்தரங்குகள், 75 நீடிக்கவல்ல யோகா பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுக்கான இதர பல நிகழ்வுகளும் நடைபெறும். மகளிர்: இந்தியாவின் கொடி ஏந்திச் செல்வோர் என்ற முன்முயற்சி மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல் மூலம் சமூக மாற்றம் குறித்து கவனம் செலுத்துவதாக இருக்கும்.

அமைதியின் சக்தி பேருந்து இயக்கம் என்பது 75 நகரங்கள் மற்றும் வட்டங்களுக்கு இன்றைய இளைஞர்களின் ஆக்கப்பூர்வ மாற்றம் குறித்த கண்காட்சியைக் கொண்டு செல்வதாக இருக்கும். கண்டறியப்படாத இந்தியா சைக்கிள் பயணம் என்பது பாரம்பரியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் இடையேயான தொடர்பை கவனத்திற்குக் கொண்டு வரும் வகையில் பல்வேறு பாரம்பரிய இடங்களில் நடைபெறும். ஒன்றுபட்ட இந்தியா இரு சக்கர மோட்டார் வாகன பிரச்சாரம் என்பது பல்வேறு நகரங்களை உள்ளடக்கி மவுண்ட் அபுவிலிருந்து தில்லி வரை நடைபெறும். தூய்மை இந்தியா திட்டம் முன்முயற்சிகள், மாதாந்திர தூய்மை இயக்கங்கள், சமூக தூய்மை நிகழ்வுகள், விழிப்புணர்வு இயக்கங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

கிராமி விருது பெற்ற திரு.ரிக்கி கேஜ், சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவிற்கு அர்ப்பணித்த பாடல் ஒன்றும் இந்த நிகழ்வின் போது வெளியிடப்பட்டது..

தனிநபர் மாற்றத்திற்கும் உலக புதுப்பித்தலுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய ஆன்மீக இயக்கமாக பிரம்ம குமாரிகள் இருக்கிறது. 1937-ல் இந்தியாவில் உருவாக்கப்பட்ட பிரம்ம குமாரிகள் 130-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளன. பிரம்ம குமாரிகள் இயக்கத்தை நிறுவிய பீடஸ்ரீ பிரஜாபீட பிரம்மாவின் 53-வது பொறுப்பேற்பு தினத்தையொட்டி இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது.


Tags : Modi ,Towards Golden India' National Festival ,of , பிரதமர் நரேந்திர மோடி,தங்க இந்தியா
× RELATED நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி இன்று கர்நாடகாவில் பரப்புரை