தமிழக கலாச்சார ஊர்திக்கு அனுமதி மறுப்பு ஒன்றிய அரசை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம்: முத்தரசன் பேட்டி

களியக்காவிளை: குமரி மேற்கு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:குடியரசு தின அணிவகுப்பில் தமிழக கலாச்சார ஊர்தியை அனுமதிக்காத ஒன்றிய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. வேலு நாச்சியார், வ.உ.சி, பாரதியார் போன்ற விடுதலை போராட்ட தியாகிகளை ஒன்றிய அரசு அவமதித்து விட்டது. இதற்காக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தல் முடிவுகளில் பாஜக படுதோல்வி அடைந்தது. பாஜ தலைவர் நட்டாவின் சொந்த மாவட்டத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாஜ தோல்வி கண்டது. கடந்த ஒரு ஆண்டாக பாஜ சரிவை சந்தித்து வருகிறது. பொதுமக்கள் உண்மையை உணர தொடங்கி இருப்பதையே இது காட்டுகிறது. பொருளாதார கொள்கைகளிலும், அரசியல் நிலைப்பாடுகளிலும் பாஜ தோற்று விட்டது என்றார்.

Related Stories: