கிராம சபை கூட்டம் நடத்திய திமுகவினர் மீதான வழக்கு ரத்து

மதுரை: கிராம சபை கூட்டம் நடத்திய திமுகவினர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது. மதுரை மணி நகரத்தைச் சேர்ந்த திமுகவினர் முத்துகணேசன் மற்றும் ராஜா ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ திமுக சார்பில் கடந்த 3.1.2021ல் கிராம சபை கூட்டம் நடந்தது. சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டோம். இதில், மக்களின் குறைகளை கேட்டறிந்தோம். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமலும் இருந்ததாக மதுரை கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘இந்த கூட்டத்தால் கொரோனா பரப்பப்படும் என கூற முடியாது. சட்டம் - ஒழுங்கு சார்ந்த பிரச்னையும் இல்லை. எனவே, இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டார்.

Related Stories: