தென்னிந்திய நடிகர் என ஒதுக்குறாங்க: பாலிவுட் பற்றி நாகார்ஜுனா

ஐதராபாத்: பாலிவுட்டில் தன்னை தென்னிந்திய நடிகர் என ஒதுக்கும் போக்கு இருப்பதாக நாகார்ஜுனா கூறுகிறார்.தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, இந்தியில் சில படங்களில் நடித்துள்ளார். இப்போது பிரம்மஸ்த்தரா என்ற இந்தி படத்தில் ரன்பீர் கபூர், அலியா பட் உடன் சேர்ந்து நடித்து வருகிறார். அவர் கூறுகையில், ‘பாலிவுட்டுக்கு சென்றால் தென்னிந்திய நடிகர் என கூறி ஒதுக்கும் போக்கு உள்ளது. அதனால்தான் தென்னிந்திய நடிகர்கள் பெரிய அளவில் அங்கு ஜொலிப்பதில்லை.

வடநாட்டுக்கு எங்கு சென்றாலும் இவர் தென்னிந்திய நடிகர் என்றுதான் சொல்வார்கள். இதற்கெல்லாம் நான் வருத்தப்படுவதில்லை. சொல்லப்போனால் இது எனக்கு பெருமையான விஷயம்தான். காரணம், இந்திய அளவில் தென்னிந்திய படங்கள்தான் இப்போது பான் இந்தியா படங்களாக வெளியாகி வெற்றியும் பெறுகின்றன’ என்றார்.

Related Stories: