×

தெலுங்கு படத்திலிருந்து காஜல் அகர்வால் நீக்கம்

சென்னை: நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமானதை தொடர்ந்து நாகார்ஜுனா படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடித்து வரும் புதிய படம் தி கோஸ்ட். பிரவீன் சத்தார் இயக்குகிறார். காஜல் அகர்வால், குல் பங்க், அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். காஜல் அகர்வால் கர்ப்பமானதை தொடர்ந்து அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவருக்கு பதிலாக சோனல் சவுகான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இவர் பாலிவுட்டில் இருந்து தென்னிந்திய சினிமாவுக்கு வந்தவர். ரெயின்போ, லெஜண்ட், டிக்டேட்டர், ரூலர் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும், ஜன்னத்,  ஜாக் அண்ட் ஜில், தி பவர் உள்ளிட்ட இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்திருந்தார்.கர்ப்பமானதை தொடர்ந்து காஜல் அகர்வால் தமிழில் இந்தியன் 2 படத்திலிருந்து விலகினார். இப்போது தி கோஸ்ட் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Tags : Kajal Agarwal , From a Telugu film Kajal Agarwal fired
× RELATED சினிமாவுக்கு காஜல் அகர்வால் முழுக்கு