எம்ஜிஆர் பிறந்தநாளை சிறப்பித்தமைக்கு முதல்வருக்கு ஆர்.எம்.வீரப்பன் நன்றி

சென்னை: எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் நேற்று வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவினை அரசு சார்பில் ஏற்பாடு செய்து, அவ்விழாவில் கடந்த 1977ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை தமிழகத்தின் முதல்வராக எம்.ஜி.ஆர் ஆட்சி சிறப்பினையும், மற்றும் கலைஞருடன் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்த நல்ல நட்பினையும் எடுத்துரைத்து எம்.ஜி.ஆர். பிறந்தநாளை சிறப்பித்தமைக்கு, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான எம்.ஜி.ஆர் ரசிகர்களின் சார்பில் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: