என்எல்சியில் வேலைவாய்ப்பு மறுப்பதை கண்டித்து போராட்டம்: வேல்முருகன் அறிவிப்பு

சென்னை: தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்  வெளியிட்டுள்ள அறிக்கை: என்எல்சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு  இன்னும் வழங்கப்படாத நிலையில், 3வது சுரங்கத்தை அமைப்பதற்கான பணிகள் நடக்கிறது. இதற்காக, 26 கிராமங்களில் இருந்து 12,125 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த திட்டமிட்டுள்ள அந்நிறுவனத்தின் நிர்வாகம், அதற்கான புதிய மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுத் திட்டத்தை அறிவித்துள்ளது. நிலம் வழங்குவோருக்கு நிரந்தர வேலை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அப்பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வேலைவாய்ப்பு அளிக்க முன்வரவேண்டும். அப்படி என்எல்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும்.

Related Stories: