×

நிதியுதவி வழங்கினார் என்பதற்காக நிர்வாகியாக நியமிப்பதா?.. விளையாட்டு சங்கங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: நிதியுதவி வழங்கினார் என்பதற்காக நிர்வாகியாக நியமிப்பதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வட்டு எறிதல் வீராங்கனை நித்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில்; தேசிய அளவிலான தடகள போட்டியில் மாநில தடகள விளையாட்டு சங்கம் தன்னை அனுமதிக்கவில்லை என குருப்பிட்டிருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வீராங்கனை நித்யா தொடர்ந்த வழக்கில் விளையாட்டு சங்கங்களுக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்த்துள்ளார். தகுதியற்ற வீரர்கள் தேர்வு செய்யப்பட்டால் சம்மந்தப்பட்ட விளையாட்டு சங்கத்தை 2 ஆண்டுகள் தடை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு விளையாட்டு சங்கமும் அரசிடம் பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும். உறுப்பினர்கள், வீரர்கள், சங்கங்களின் நிதிநிலை விவரங்களை அரசிடம் வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும். தகுதியான வீரர்களை தேசிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்பாதது குறித்து புகாரளிக்க தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும் சங்கங்களின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் விளையாட்டு வீரர்களாக இருக்க வேண்டும். விளையாட்டு போட்டிகளுக்கு செலவிடப்படும் தொகை ஆன்லைனில் வெளியிட வேண்டும் என கூறியுள்ளார்.


Tags : Chennai High Court , Appoint an administrator for providing financial assistance? .. Chennai High Court warns sports associations
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...