யு 19 உலக கோப்பை: அயர்லாந்துடன் இன்று இந்தியா மோதல்

தரூபா: 16 அணிகள் பங்கேற்றுள்ள 14வது யு 19 உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று ஏ பிரிவில் இங்கிலாந்து கனடாவையும்,  பி பிரிவில் தென்ஆப்ரிக்கா உகான்டாவையும், சி பிரிவில் ஆப்கானிஸ்தான் பப்புவா நியூ கினியாவையும் வீ்ழ்த்தியது.

இன்று மாலை 6.30 மணிக்கு பி பிரிவில் இந்திய அணி தனது 2வது போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில், தென்ஆப்ரிக்காவை வீழ்த்திய இந்தியா வெற்றியை தொடரும் முனைப்பில் உள்ளது. இன்று நடைபெறும் மற்றொரு போட்டியில் டி பிரிவில் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து அணியுடன் மோதுகிறது.

Related Stories: