ஜெய்ப்பூருடன் இன்று மோதல்: வெற்றி கணக்கை தொடங்குமா தெலுங்கு டைட்டன்ஸ்?

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 62வது லீக் போட்டியில் தபாங் டெல்லி 32-29 என்ற புள்ளி கணக்கில் பாட்னாவை வீழ்த்தியது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில், குஜராத் ஜெயண்ட்ஸ்-யு மும்பா அணிகள் மோதின. கடைசி வரை த்ரிலிங்காக நடந்த இந்த போட்டி 24-24 என சமனில் முடிந்தது.  

இன்று இரவு 7.30 மணிக்கு அரியானா ஸ்டீலர்ஸ்-புனேரி பால்டன், இரவு 8.30 மணிக்கு ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் மோதுகின்றன. தெலுங்கு டைட்டன்ஸ் 10 போட்டியில் 8 தோல்வி, 2 டிரா என பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இன்று வெற்றி கணக்கை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories: