கொரோனா மட்டுமின்றி பிற நோயில் இருந்தும் மக்களை காப்பது அவசியம் :அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: பொங்கல் விழா காரணமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வரும் நாள்களில் அதிகரிக்கும் என்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கை மாற்று அறுவை சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், 104 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

தமிழகத்தில் 25 ஆயிரம் கிராமங்களில் தொற்று பாதிப்பு உள்ளது.நகர்ப்புறங்களில் 28 தெருக்களில் தொற்று பரவியுள்ளது.பொங்கல் விழா காரணமாக வரும் நாட்களில் கொரோனா தொற்று பாதித்தவர் எண்ணிக்கை அதிகரிக்கூடும். இருப்பினும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. மத்திய அமைச்சர் அமித் ஷாவை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் சந்தித்த பின்னர், நீட் தேர்வு விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனா மட்டுமின்றி பிற நோயில் இருந்தும் மக்களை காப்பது அவசியம் என்று தெரிவித்தார். இந்த நிகழ்வில் அறநிலையத்துறை அமைச்சர் சேகரிபாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: