×

திண்டுக்கல்லில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு-வீணாகும் குடிநீர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை காலம் துவங்கும் நேரத்தில் குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே உடைந்து தண்ணீர் வீணாக தொடங்கியுள்ளன. இது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நீக்கமற நிறைந்திருப்பது குடிநீர் பிரச்சனையாகும். திண்டுக்கல் குடிநீர் பிரச்சனை ஆத்தூர் மற்றும் காவிரி குடிநீர் திட்டம் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது. கோடை காலம் துவங்கும் நிலையில் வெயில் தற்போது வாட்டி வருகிறது. நீர்நிலைகளிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இந்நிலையில் காவிரி கூட்டுக் குடிநீர் ஆங்காங்கே உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. திண்டுக்கல் குள்ளனம்பட்டி, வாழைக்காய் பட்டி பிரிவு உட்பட பல இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிப் போகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: பொதுமக்களுக்கு குடிநீர் ஒரு மணி நேரம் விடுவதே கடினமாக இருக்கிறது. குழாயில் குடிநீர் வராததால் குடங்கள் தவம் கிடக்கும் நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில் வீடுகளுக்கு தண்ணீர் விடாமல் அங்கு குழாய் உடைந்து தண்ணீர் ஆறாக பெருகி ஓடுவது எங்கள் கண்ணில் தண்ணீர் வர வைக்கிறது.

குடிநீர் உடைப்பை உடனடியாக சரி செய்யாவிட்டால் பொதுமக்கள் திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Tags : Dindigul , Dindigul: During the onset of summer in Dindigul district, drinking water pipes broke and water was wasted
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...