×

அகிலேஷ் யாதவ் குடும்பத்திலிருந்து பாஜகவில் இணைந்த அபர்ணா யாதவ்! :உத்தரப் பிரதேச அரசியலில் பரபரப்பு!!

லக்னோ : சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங்கின் இளைய மருமகள் அபர்ணா யாதவ் பாஜக கட்சியில் இணைந்து இருப்பது உத்தரப் பிரதேச அரசியலில் பரபரப்பை அதிகரித்துள்ளது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 10ல் தொடங்கி மார்ச் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க அம்மாநிலத்தில் அரசியல் மாற்றங்கள் தொடர்ந்து வருகின்றன. பாஜகவுக்கு அதிர்ச்சி தரும் வகையில், உத்தரப் பிரதேச மாநில அமைச்சர்களான சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் ஷைனி, தாரா சிங் சவுகான் ஆகியோரும் பாஜக எம்எல்ஏக்கள் 4 பேரும் கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.

இதையடுத்து பழிக்கு பழி அரசியல் சம்பவமாக முலாயம் சிங்கின் இளைய மருமகள் அபர்ணா யாதவை தங்கள் பக்கம் இழுத்துள்ளது பாஜக. அபர்ணா யாதவ், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் இளைய சகோதரர் பிரதீப் யாதவின் மனைவி ஆவார் அபர்ணா யாதவ் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் லக்னோ கன்டோமெண்ட் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். தற்போது பி வேர் என்ற தொண்டு நிறுவனத்தை அபர்ணா யாதவ் நடத்தி வருகிறார்.

அத்துடன் பசுக்கள் பாதுகாப்பு மையங்களை நடத்தி வரும் அபர்ணா யாதவ், அவ்வப்போது பிரதமர் மோடியின் செயல்பாடுகளை புகழ்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தவர். இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவரும் ஆஸம்கான் எம்பியுமான அகிலேஷ் யாதவ், எதிர்வரும் உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   


Tags : Aparna Yadav ,BJP ,Akhilesh Yadav ,Uttar Pradesh , சமாஜ்வாதி கட்சி,அபர்ணா யாதவ்
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு